பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.?

Indian National Congress
By Sumathi Feb 16, 2023 10:45 AM GMT
Report

நவம்பர் 1, 2000 ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநில தலைநகர் ராய்ப்பூர். 7 மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,545,198 ஆக உள்ளது.

சத்தீஸ்கர் 

பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.? | Chhattisgarh Politics In Tamil

அதில் ஆண்கள் 12,832,895 மற்றும் பெண்கள் 12,712,303 ஆகவும் உள்ளனர். மாநிலத்தின் 80% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த சிறு தொழிலையே நம்பியுள்ளனர். இது இரும்பு ஆலைகள், மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், அலுமினியம், இரும்பு, சுண்ணாம்பு, தோலமைட், பாக்சைட், படிகக்கற்கள், பளிங்கு கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாகும். இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் 20% இந்த மாநிலம் தான் கொண்டுள்ளது.

அஜித் ஜோகி 

அஜித் ஜோகி சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவது முதலமைச்சராக நவம்பர் 2000 முதல் டிசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தார். இந்தூர் மாவட்ட ஆட்சியராக 1981 முதல் 1985 முடிய பணிபுரிந்தவர். 2003-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோகி படுதோல்வியடைந்தார். சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து ஜோகி, மாஹாசமுண்ட் தொகுதியில் 2004-ம் ஆண்டு போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.? | Chhattisgarh Politics In Tamil

ஆனால், பிரசாரத்தின் போது, ஜோகிக்கு ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, இடுப்புப் பகுதி முடங்கிப்போனது. மீண்டும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அஜித் ஜோகி, சூன் 2016-இல் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியை நிறுவினார். அப்போது அஜீத் ஜோகி மற்றும் அவரது மகன் அமித் ஜோகி ஆகியோர் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அன்டகார் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தனர்.

பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.? | Chhattisgarh Politics In Tamil

அவரது மகன் அமித் ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 2018 சட்டமன்றத் தேர்தலில் ஜோகி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். ஆனால், 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு ஜோகியின் கட்சியில் இருந்து 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2020ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

 ராமன் சிங்

2008ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ராமன் சிங்கின் 15 ஆண்டுக்கால முதல்வர் வாழ்வுக்கு, ஜோகியின் தோல்வியே காரணமாக அமைந்தது. ஆயுர்வதே டாக்டரான ரமண் சிங் ஜன சங்கத்தின் இளைஞர் பிரிவின் மூலமாக அரசியலுக்கு வந்தார். கவர்தா நகராாட்சியிலும், சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். வர்த்தக இணை அமைச்சராகவும் இருந்தார். இஸ்ரேல், நேபாளம், பாலஸ்தீனம், துபாயில் நடந்த வர்த்தக விழாவில் இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றுள்ளார்.

பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.? | Chhattisgarh Politics In Tamil

2005ம் ஆண்டு சல்வா ஜுடும் திட்டத்தின் கீழ் நக்சலைட் இயக்கங்களை வெற்றிகரமாக தடை செய்தார். சட்டிஸ்கரில் அவர் செய்துள்ள பணிகளை ஐ. நா சபை அங்கீகரித்துள்ளது. குறிப்பாக நிதி மேலாண்மை குறித்து பாராட்டப்பட்டுள்ளார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளார். 2014ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் சுற்றுலாவை மேம்படுத்தியமைக்காக சட்டிஸ்கர் சுற்றுலாத்துறைக்கு விருது கிடைத்தது. தேசிய விருது 2017ம் ஆண்டு கிடைத்தது. 2003 முதல் 2018 வரை முதலமைச்சராக இருந்தார்.

பூபேஷ் பாகல்

அதனைத் தொடர்ந்து, 2018ல் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் என்பவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கிறார். சத்தீஸ்கர் சட்டசபையில், துர்க் மாவட்டம் பதான் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆரம்பத்தில் இருந்தே பாகல் சமூக சேவையில் மிகுந்த அக்கறை கொண்டவர். சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர்.

பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.? | Chhattisgarh Politics In Tamil

ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையான முறையில் திருமணங்களை செய்வதை ஊக்குவிப்பவர். இதன் பொருட்டு ஆண்டுதோறும் இலவச திருமண நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் எண் கணிதம் என்பதை கண் மூடித்தனமாக பின்பற்றி வருகிறார். அதன்படி, 2023 என்ற ஆண்டில் இருக்கும் ’23’ அடிப்படையில் மீண்டும் தானே முதல்வராக பதவியேற்பேன் என்ற தீர்மானத்துடன் உலா வருகிறார்.

கைகொடுக்குமா கணித ஜோதிடம் 

நாடு நெடுக பல்வேறு மாநிலங்களிலும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாஜகவே ஆண்டு வருவதன் மத்தியில் எஞ்சியிருக்கும் எதிர்க்கட்சி மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கரும் ஒன்று. பாஜகவுக்கு எதிராக திடமாக தேர்தலில் களப்பணியாற்ற வேண்டிய பூபேஷ் பாகல் இப்படி எண் கணிதத்தில் ஆழ்ந்திருக்கிறாரே என்ற காங்கிரஸ் கட்சியினர் நொந்துக்கொண்டுள்ளனர். 2018 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட போது ராமன் சிங் இன்னும் உற்சாகமாக இருந்தார்.

பாஜகவின் மத்தியில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் - தக்கவைக்குமா.? | Chhattisgarh Politics In Tamil

ஏனெனில் 3 ஆட்சிக் காலங்களை பூர்த்தி செய்து சட்டீஸ்கரின் முதல்வராக நான்காம் முறையாக தன்னுடைய ’4’ ராசி அமத்தும் என நம்பினார். ஆனால் அந்த 4, கருணையின்றி ராமன் சிங்கை கவிழ்த்து விட்டது. அடுத்து ஆட்சியை பிடித்திருப்பவர் 23 என்ற எண்ணில் பிடிப்பாக இருக்கிறார்.

தங்களைப் பற்றி எண்ணாது, எண்களின் மீது கண்ணாக இருக்கும் சட்டீஸ்கர் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நவம்பருக்குள் பதில் அளிக்கத் தயாராகி வருகிறார்கள். பார்போம், இம்முறை வெல்லப்போவது எண் கணித ஜோதிடமா அல்லது மக்களின் எண்ணமா என்று!