மாட்டு கோமியம் கொள்முதல் செய்யும் திட்டம் தொடக்கம் - சட்டீஸ்கர் முதலமைச்சர் அறிவிப்பு

By Nandhini Jul 19, 2022 06:26 AM GMT
Report

மாட்டு கோமியம்

மாட்டு கோமியத்திலிருந்து மருந்துகள் தயாரிப்பதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஊக்குவித்து வருகின்றது. அந்த மாநிலத்தின் ஆயுர்வேதத் துறை, சமீபத்தில் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. கோமியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் கல்லீரல் நோய், மூட்டுவலி, நோய் எதிர்ப்புசக்திக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் அதிமருந்தாக விளங்குகிறது. 

கோமியம் கொள்முதல்

இந்நிலையில், மாட்டு கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை சட்டீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜூலை 28 முதல் மாட்டு கோமியம் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார். மேலும், ஒரு லிட்டர் கோமியம் ரூ.4 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Chhattisgarh Chief Minister