செலவு பண்றது நாங்கதானே!'- பிரதமர்படத்தை அகற்றிய சத்தீஸ்கர் அரசு
மாநில அரசே கொரோனா தடுப்பூசிகளை பணம் கொடுத்து வாங்குவதால். தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படத்தை அகற்றிவிட்டு, தங்கள் மாநில முதல்வர் படத்தை அச்சிடவுள்ளது சத்தீஸ்கர் அரசு.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுவோருக்கு வழங்கப்படக் கூடிய சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சைகளை கிளப்பியநிலையில்,தற்போது மத்திய அரசால் போதுமான தடுப்பூசிகளை வழஙக முடியாத நிலையில் உள்ளது.
இதில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்த நிலையில், அதனை அகற்றிவிட்டு சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு கண்டணத்தை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், யாருடைய புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று போட்டிபோட இது நேரமில்லை. வீணாக மாநில அரசு விளம்பரங்களை தேட வேண்டாம் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சட்டீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ,18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிதியினை மாநில அரசு செய்கிறது.
மத்திய அரசு பணம் கொடுக்கும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் உள்ளது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படத்தை நீக்கிவிட்டு முதல்வர் படத்தை வைத்தது சத்தீஸ்கர் அரசு
— Niranjan kumar (@niranjan2428) May 22, 2021
மத்திய அரசு காசு கொடுக்கும் தடுப்பூசிக்கு பிரதமர் மோடி படம் வைக்கட்டும், நாங்கள் காசு கொடுத்து வாங்குகிறோம்,எம் முதல்வர் படத்தை வைக்கிறோம் என அம்மாநில அரசு விளக்கம் pic.twitter.com/QLzpr75XFA
ஆக ,மாநில அரசு செலவு செய்யும் சான்றிதழ்களில் முதல்வர் படம் ஏன் இருக்கக்கூடாது?" என எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் எங்களது சொந்த பணத்தில்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறோம்.
ஆகவே சான்றிதழ்களில் எங்களது புகைப்படத்தை அச்சிட்டு தருவீர்களா? என மற்றொரு தரப்பினர் கேலி செய்து வருகின்றனர்.
யாரது புகைப்படத்தை வெளியிட்டாலும் தற்போதைய நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.