மீண்டும் இணையும் ஐஸ்வர்யா - தனுஷ்? சீக்ரெட் உடைத்த பிரபலம்!
தனுஷ் - ஐஸ்வர்யா சேர்வதற்கான அறிகுறிகள் தெரிவதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அதனை அவரே இயக்கியிருந்தார். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.

இதற்கிடையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த அவர் பிரிவதாக அறிவித்தார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் முயன்றுவருவதாக கூறப்பட்டது.
ரஜினி 50
அதேசமயம் சமீபமாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை தனுஷ் லைக் செய்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, “ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி 73 வயது அப்பாவாக தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் கவலையோடுதான் இருந்தார்.

ஏனெனில் பேரன்கள் வளர்ந்துவிட்டார்கள். இப்போது மகளும், மருமகனும் பிரிந்திருக்கிறார்களே என்கிற கவலைதான் அது. ஆனால் சமீபமாக தனுஷ் - ஐஸ்வர்யா சேர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.முக்கியமாக ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து அடுத்த வருடத்துடன் 50 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
எனவே அதனையொட்டி ஐஸ்வர்யா ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். அதில் தனுஷும் பங்களிக்கவிருக்கிறார். இதன் காரணமாக ரஜினி இப்போது குஷியாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan