செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
ஜிஸ்கொயர் சோதனை தமிழகம் முழுவதும் இன்று ஜிஸ்கொயர் நிறுவனங்கள் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது செட்டிநாடு குழுமநிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செட்டிநாடு குழுமம்
சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சோதனை
சென்னையில் அண்ணா சாலை, எழும்பூரில் உள்ள ருக்மிணி லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் செட்டிசெட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.