கழட்டி விடப்படும் இந்திய அணி வீரர்... 2வது டெஸ்டில் வெற்றி பெற முடிவு...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய வீரர் இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஒருநாள் ஆட்டம் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறும் என பலரும் நினைத்த நிலையில் மழை அனைத்தையும் கெடுத்தது போல் மாற்றி விட்டது.
இதனால் அதிருப்தியடைந்த இந்திய அணி எப்படியாவது அடுத்தடுத்து நடைபெறும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என மன உறுதியுடன் உள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் என அறியப்பட்டும் சட்டிஸ்கர் புஜாரா ஆடும் லெவனில் இருந்து கழற்றி விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் டெஸ்ட்டில் அவர் 4 மற்றும் 12 மட்டுமே எடுத்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்க கூடாது என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இந்திய அணியும் அந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.