கண்டிப்பா ஜெய்ப்போம்.!! ஆனால் அது என் கையில் இல்லை..வாய் திறந்த புஜாரா

India Cricket Team Cheteshwar Pujara
By Thahir Dec 19, 2021 05:31 PM GMT
Report

கடந்த சில நாட்களாக சர்ச்சை, மோதல், விரிசல், பேட்டி என நடைபெற்ற சம்பவங்கள் இந்திய ரசிகர்களுக்கு மன உளைச்சலை தந்தது. ஆனால், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறது.

இந்த இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர். 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இதற்காக இந்திய அணி ஏற்கனவே ஜோகனஸ்பர்கில் முகாமிட்டுள்ளது. முதல் நாள் பயிற்சியில் காலால் உதைத்து வாலிபால் விளையாடிய இந்திய அணி வீரர்கள், இரண்டாவது நாளில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

விராட் கோலி, புஜாரா, கே.எல்.ராகுல், ரஹானே ஆகியோர் முதலில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை பயிற்சியாளர் டிராவிட் மேற்பார்வை செய்ததுடன் வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

இதே போன்று பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த சர்மாவும் பந்துகளை வீசி பயிற்சி மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த பயிற்சி சிறப்பாக அமைந்ததாக விராட் கோலி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற சோகம் நீடித்து வருகிறது.

பயிற்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புஜாரா, தென்னாப்பிரிக்க தொடரை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதாக குறிப்பிட்ட புஜாரா, அதே போல் இம்முறையும் பந்துவீச்சாளர்கள் தங்களது அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்று கூறினார்.

தென்னாப்பிரிக்க அணி கடந்த 6 மாதத்திற்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை ஆனால், நாங்கள் தற்போது தான் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துடன் விளையாடினோம்.

இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக உள்ளதாக புஜாரா தெரிவித்தார். தென்னாப்பிரிக்க தொடரை முதல் முறையாக வெல்ல இது நல்ல வாய்ப்பு என்றும் புஜாரா குறிப்பிட்டார்.