உளறி கொட்டிய சேத்தன் சர்மா.... - ஒரே வரியால் மவுனம் கலைத்த விராட் கோலி... - ரசிகர்கள் மகிழ்ச்சி....!
உளறி கொட்டி சிக்கலில் சிக்கிய சேத்தன் சர்மா -
ரோஜர் பின்னி தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது.
அந்த ரகசிய கேமராவில், ஒரு நபரிடம் பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பல விவகாரங்கள் குறித்து பேசி புலம்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த கேமரா பதிவில், கங்குலிக்கும், விராட் கோலி இடையே மோதல் உள்ளது. ஊக்கமருந்து உட்கொண்டதாகக் கூறப்படும் இந்திய கிரிக்கெட்டில் பல ஊழல்கள் நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் பல வீரர்கள் உடல் தகுதி பெற ஊசி போடுகிறார்கள். விராட்கோலிக்கும், கங்குலிக்கும் இடையேயான பயங்கர "ஈகோ பிரச்சனைகள்" உள்ளது என்று பல அடுக்கடுக்கான தகவலை கூறி சிக்கல் வலையில் சிக்கியுள்ளார் சேத்தமன் ஷர்மா.
இந்தியாவின் டிசம்பர் - ஜனவரி 2021 - 22 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கோலி வேண்டுமென்றே ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஏனெனில், கங்குலி தன்னை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியதற்கு கோலிதான் காரணம் என்று நம்பினார்.
2021 டிசம்பரில் ODI அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் நீக்கப்பட்டார். அவர் T20I தலைமையை கைவிட முடிவு செய்த பிறகு, ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஒரே வரியால் மவுனம் கலைத்த விராட் கோலி
ஒரு வீரருக்கு எதிராக ஒட்டுமொத்த கிரிக்கெட் வாரியமே செயல்பட்டுள்ளது சேத்தன் சர்மாவின் உளறலால் தெரியவந்துள்ளது.
ஆனால், விராட் கோலி மவுனமாக பத்திரிகைகளில் எதுவும் கூறாமல் பெருந்தன்மையாக நான் பதவி விலகினேன் தான். ஆனால் என்னை யாரும் மறுபரிசீலனை செய்ய சொல்லவில்லை என்று மறைமுகமாக தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார். இவ்வளவு பிரச்சினை நடந்தபோதும்கூட விராட் கோலி நேற்று தனது சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி மைதானத்திற்கு செல்கிறேன். 'Nostalgic' உணர்வாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ஒரு ஆங்கில வார்த்தையின் மூலம் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் அவர் அமைதியாக பதில் கூறியிருக்கிறார்.
அது என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அதாவது Nostalgic என்ற வார்த்தைக்கு அர்த்தம், கடந்த காலங்களில் நடந்த நல்லது அல்லது கொடுமையான விஷயங்களை
தற்போது நினைத்து பார்த்து நெகிழ்ச்சி அடைவதாகும்.
அந்தவகையில் விராட் கோலியும் தனக்கு நடந்த கொடுமைகளுக்கு தற்போது நியாயம் கிடைத்துவிட்டது போல் உணர்வு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.