ஊக்கமருந்து பயன்படுத்தும் இந்திய வீரர்கள் - ரகசியங்களை கசியவிட்ட தேர்வுக்குழு தலைவர்!
இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டதாக தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசியுள்ளார்.
சேத்தன் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா, தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை பேசியது வைரலாகி வருகிறது. அதில், தனி நபர் ஒருவருரிடம் பேசிய சேத்தன் சர்மா,
பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி, விராட் கோலியுடன் இணக்கமாக இருந்ததில்லை என்றும், அதேவேளையில் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
சர்ச்சை
மேலும், காயமடைந்த வீரர்கள் உடல்தகுதி பெறாத நிலையிலும், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு அணிக்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டார். மேலும், காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் பிசிசிஐ நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.