சேத்தன் சர்மா உளறல் விவகாரம்.... - இதையெல்லாம் கண்டுக்க வேண்டாம்... - பிசிசிஐ அதிகாரி அந்தர் பல்டி..!
இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் ரகசியங்களை வெளிப்படையாக போட்டு உடைத்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா குறித்து பிசிசிஐ அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
உளறி கொட்டி சிக்கலில் சிக்கிய சேத்தன் சர்மா -
ரோஜர் பின்னி தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது. அந்த ரகசிய கேமராவில், ஒரு நபரிடம் பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பல விவகாரங்கள் குறித்து பேசி புலம்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த கேமரா பதிவில், கங்குலிக்கும், விராட் கோலி இடையே மோதல் உள்ளது. ஊக்கமருந்து உட்கொண்டதாகக் கூறப்படும் இந்திய கிரிக்கெட்டில் பல ஊழல்கள் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டில் பல வீரர்கள் உடல் தகுதி பெற ஊசி போடுகிறார்கள்.
விராட்கோலிக்கும், கங்குலிக்கும் இடையேயான பயங்கர "ஈகோ பிரச்சனைகள்" உள்ளது என்று பல அடுக்கடுக்கான தகவலை கூறி சிக்கல் வலையில் சிக்கியுள்ளார் சேத்தமன் ஷர்மா.
இதையெல்லாம் கண்டுக்க வேண்டாம்
இந்நிலையில், சேத்தன் சர்மாவின் கருத்துகளுக்கு பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
சேத்தன் சர்மா கொஞ்சம் ஓவராகவே பேசியுள்ளார். ஆனால், இந்திய அணியில் உள்ள டாப் வீரர்கள் யாரும் அவரிடம் பேசியதே இல்லையே.
ரோகித், விராட் கோலி, ராகுல் டிராவிட்விடம் சேத்தன் எப்போவதாவது பேசியிருக்கிறாரா? எங்கையாவது நாம் பார்த்திருக்கிறோமா? பயிற்சி நேரங்களில் கூட அவரை பார்க்க முடியாது. அவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கூட ஒரு மூலையில் நின்றுக்கொண்டு தான் கவனித்தார்.
இப்படி இருக்கும்போது, அவர் பேசியதை பெரிதாக எடுக்க வேண்டாம் என்றார். தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஒரு தேர்வுக்குழு தலைவருக்கு இதுக்கூடவா தெரியாமல் போகும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.