வீரர்கள் பற்றி உளறி கொட்டி சிக்கலில் சேத்தன் சர்மா... - ஆஸ்திரேலியா மீடியா சதித்திட்டம்..? கலக்கத்தில் ரசிகர்கள்...!
இந்திய வீரர்கள் பற்றி உளறி கொட்டிய சேத்தன் சர்மாவை ஆஸ்திரேலியா மீடியா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளறி கொட்டி சிக்கலில் சிக்கிய சேத்தன் சர்மா -
ரோஜர் பின்னி தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது.
அந்த ரகசிய கேமராவில், ஒரு நபரிடம் பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பல விவகாரங்கள் குறித்து பேசி புலம்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த கேமரா பதிவில், கங்குலிக்கும், விராட் கோலி இடையே மோதல் உள்ளது.
ஊக்கமருந்து உட்கொண்டதாகக் கூறப்படும் இந்திய கிரிக்கெட்டில் பல ஊழல்கள் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டில் பல வீரர்கள் உடல் தகுதி பெற ஊசி போடுகிறார்கள். விராட்கோலிக்கும், கங்குலிக்கும் இடையேயான பயங்கர "ஈகோ பிரச்சனைகள்" உள்ளது என்று பல அடுக்கடுக்கான தகவலை கூறி சிக்கல் வலையில் சிக்கியுள்ளார் சேத்தமன் ஷர்மா.
ஆஸ்திரேலியா மீடியாவின் சதி திட்டமா...?
தற்போது, சேத்தன் சர்மாவை இப்படிச் சிக்க வைப்பதால் யாருக்கு என்ன பயன் இருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 2 சீசன்களில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தட்டிச் சென்றது.
தற்போது, நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆக்ரோஷத்துக்கு மாஸாக விளையாடி வருவதால் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது கடினம் என்று அனைவருக்குமே நன்றாக புரிந்துள்ளது.
அப்படிப்பட்ட நேரத்தில் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் வெளியாகி உள்ளது பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. இது ஆஸ்திரேலியா மீடியா திட்டத்தில் பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாசிக்கி உள்ளாரோ? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
வெற்றிக்காக ஆஸ்திரேலியா எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சந்தேகத்தில், பிசிசிஐ தேர்வு வாரியத் தலைவரை இந்த வலையில் வீழ்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது?.
சேத்தன் ஷர்மாவின் கருத்துகளால், விராட் கோலியை மட்டுமல்ல, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் மற்ற வீரர்களையும் பாதித்துள்ளது. சேத்தன் சர்மாவின் மோசமான இந்த உளறல்களால் இந்திய அணியை காயப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளிலிருந்து அணியை எப்படி மீட்டெடுப்பது என்பது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கையில் தான் இருக்கிறது.