இணையத்தில் வைரலாகும் ரோகித் ஷர்மாவின் ட்வீட்
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் பழைய ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
டெஸ்ட் தொடருக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்ததையடுத்து, தொடக்க வீரர் ரோஹித் சர்மா நேற்று இந்தியாவின் நிரந்தர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்கா தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து விராட் கோலி ராஜினாமா செய்த சில வாரங்களில் ரோகித் டெஸ்ட் கேப்டன் பதவியை பெற்றுள்ளார்.
விராட் கோலிக்கு பிறகு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் கேப்டனாக ரோகித் ஷர்மா பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், ரோகித் ஷர்மாவின் மூன்று ஆண்டுகளுகு முன்பு பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
Throw me to the wolves and I come back leading the pack
— Rohit Sharma (@ImRo45) September 1, 2018
அந்த ட்வீட்டில், 'என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், நான் அந்த ஓநாய் கூட்டத்தை வழிநடத்தி வருகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அகில இந்திய மூத்த-தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா,
"ரோகித் ஷர்மாவைப் பொறுத்த வரையில், அவர் நம் நாட்டின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர், அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார். ரோகித்தை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்,
கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடலை எப்படி நிர்வகிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. தேர்வுக் குழுவாக நாங்கள் மேலும் கேப்டன்களை வளர்க்க விரும்புகிறோம்." என்று கூறினார்.
ரோகித் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றி மேலும் பேசிய சேத்தன், "ரோகித் எங்களின் தெளிவான தேர்வு, அவரை கேப்டனாக நியமித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
அவருக்கு கீழ் உள்ள வீரர்களை வருங்கால கேப்டன்களை உருவாக்குவோம், எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புவோம்" "ரோகித் நீண்ட காலம் கேப்டனாக இருப்பது நல்லது.
ஆனால் அதை யாராலும் கணிக்க முடியாது, ரோகித்துக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு பொருத்தமாக இருக்கும் வரை, அவர் டெஸ்ட் கேப்டனாக இருப்பார். அவர் ஓய்வெடுக்க விரும்பினால், அது அவருடைய விருப்பம்" என்றும் சேத்தன் தெரிவித்தார்.