கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்

By Irumporai May 21, 2022 09:28 AM GMT
Report

செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.

செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஐந்தாவது சுற்றில் சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் | Chessable Masters Praggnanandhaa 2Nd Time In 2022

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 40-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் நாக்-அவுட் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறார்.

உலகின் இளைய கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு மிஸ்ராவும் 16 பேர் கொண்ட போட்டியில் பங்கேற்கிறார். image ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.