செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம் பெற வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

Chess Madurai 44th Chess Olympiad
By Nandhini Jul 28, 2022 01:52 PM GMT
Report

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்புத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி இடம் பெறாததால், சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், செஸ் ஒலிம்பியாட் பிரதமர் படம் இடம் பெற வேண்டும். செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம் பெற வேண்டும். சர்வதேச அளவில் நடைபெறும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ்குமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.     

Chess Olympiad promotion

Court order