செஸ் நிறைவு விழா மும்முரம் - கையில் வாக்கி டாக்கியுடன் வலம் வரும் விக்னேஷ் சிவன்!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கையில் வாக்கி டாக்கியுடன் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
நிறைவு விழா
சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரி அருகே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழா கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் விழா தொடங்கிய போதும் கூட வாக்கி டாக்கியுடன் சில அறிவுறுத்தல்களை சொல்லி வந்தார். இந்த விழா சிறப்பாக நடந்ததாக அனைவருமே விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவர் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குகிறார். மேடையில் செஸ் போர்டு வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் 600 கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
தொடக்க விழா எவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்றதோ அது போல் நிறைவு விழாவும் நடைபெற்று வருகிறது.