செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - ட்ரம்ஸ் இசைத்து அசத்திய முதலமைச்சர்!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இதில் ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ட்ரம்ஸ் இசைத்தார்.
செஸ் நிறைவு விழா
இந்நிகழ்ச்சியில் டிஜிட்டல் திரையில், முன்னாள் தமிழக முதல்வர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.
இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மு.க.ஸ்டாலின்
வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான வீரர்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்- வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர்.
அதேபோல இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது.
இதில் செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்க உள்ளார்.