செஸ் ஒலிம்பியாட் - 500 மில்லி கிராம் தங்கத்தில் சிற்பம் செதுக்கிய கலைஞர்...!
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.
500மில்லி கிராம் தங்கத்தில் சிற்பம்
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக கோவையைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் 500 மில்லி கிராம் தங்கத்தில் சிற்பம் ஒன்றை செதுக்கி வடிவமைத்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் அனைவரையும் மிக வெகுவாக கவர்ந்துள்ளது.