44-வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நெகிழ்ச்சி உரை
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்புத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
அமைச்சர் அனுராக் தாக்கூர் உரை
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது -
இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதை காணும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். பிரதமர் மோடி விளையாட்டுத்துறைக்கு பெரிதும் உறுதுணையாக இந்து வருகிறார்.
இதை மீண்டும் நிரூபித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒரு தருணத்தில் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அடிப்படை நிலையிலிருந்து வீரர்களின் திறமையை மேம்படுத்தும் திட்டங்களை இந்தியா வகுத்திருக்கிறது. உலகம் முழுவதிலிருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை இந்தியா வரவேற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.