செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு கால்பந்து போட்டி - அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

Chess Football 44th Chess Olympiad
By Nandhini Aug 04, 2022 08:14 AM GMT
Report

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

கால்பந்து போட்டி

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு நட்பு ரீதியான கால்பந்து போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் வெளிநாட்டு செஸ் வீரர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.   

chess