செஸ் ஒலிம்பியாட் - தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி - குவியும் பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிவாகை சூடியுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி வெற்றுள்ளார்.
42-வது நகர்த்தலில் ஜார்ஜியா அணி வீராங்கனை பட்சியாசிவிலியை வீழ்த்தி நந்திதா வெற்றி பெற்றார். ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய சி அணி தோல்வி அடைந்த நிலையில், தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழக வீராங்கனை நந்திதாவிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.