சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது...!
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் முதல் போட்டியை மாமல்லபுரத்தில் ஒன்றிய அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போட்டி தொடங்கியது
இந்நிலையில், மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் தொடங்கியுள்ளது. செஸ் போட்டிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று தொடக்க நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 186 நாடுகளை சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.