சென்னை செஸ் ஒலிம்பியாட் - வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.
உள்ளூர் விடுமுறை
இன்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகை அறிவிப்பு
இந்நிலையில், சாதாரண மக்களும் பங்கேற்கும் வகையில் ‘கர்டைன் ரைசர் ரேபிட்’ சதுரங்க போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.