# Chess Olympiad 2022 : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு

M K Stalin Chess Narendra Modi 44th Chess Olympiad
By Irumporai Jul 28, 2022 01:19 PM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர் இந்நிலையில் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடன் பங்கேற்றார்

மணற் சிற்பத்தில் பிரதமர் முதலமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடங்கி வைக்க பிதமர் மோடி தனி விமானம் சென்னை வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியானது இந்தியாவின் பன்முகதன்மையை காட்டும் விதமாக 8 மாநிலங்களின் பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

# Chess Olympiad 2022 : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு | Chess Olympiad 2022 Narendramodi Stalin

அதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் 2 பியானோக்கள் மாஸ் காட்டிய லிடியன், அதோடு மணல் ஒவியத்தில் மோடி ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றது.

ஒலிம்பியாட் போட்டி தொடாக்க விழாவில் பங்குபெறுவதற்காக இவர் செஸ் கரை வேட்டி மற்றும் துண்டு அணிந்து சென்னை வந்தார்.

# Chess Olympiad 2022 : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு | Chess Olympiad 2022 Narendramodi Stalin

அடையாறு தளத்திலிருந்து பிரதமர் மோடி சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு கார் மூலம் பயணம் செய்து வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக கடற்கரை கோயில் வெண்கலை சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.