Chess Olympiad 2022: பறந்து பியானோ வாசித்த இசைக் கலைஞர் .. வியந்து பார்த்த அமைச்சர்

Chess Durai Murugan 44th Chess Olympiad
By Irumporai Aug 09, 2022 11:43 PM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அந்தரத்தில் பறந்தபடியே பியானோ வாசித்த பெண் இசை கலைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட்

மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெற்றது இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பறந்தபடியே இசை 

இறுதி நாள் என்பதால் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் பெண் பியானோ கலைஞர் பறக்கும் பியானோவில் பறந்தபடியே இசை வாசித்துள்ளார்.

பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை வாசித்தார். அதனை தொடர்ந்து அந்தரத்தில் பறந்தபடி வந்தே மாதரம் பாடலுக்கு அப்பெண் இசை இசைத்தது பார்வையாளர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

Chess Olympiad 2022: பறந்து  பியானோ வாசித்த இசைக் கலைஞர் .. வியந்து பார்த்த அமைச்சர் | Chess Olympiad 2022 Closing Chennai Flying Pianist

அதனை தொடர்ந்து, ஆளப்போறான் தமிழன், படையப்பா போன்ற பாடல்களுக்கு இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடியே இசையமைத்தார். இதனை அமைச்சர் துரை முருகன் வியந்து பார்க்க இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.