செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி : நடனக் கலைஞர்களால் வண்ணமயமான நேரு உள் விளையாட்டு அரங்கம்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்
. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர் இந்நிலையில் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடன் பங்கேற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடங்கி வைக்க பிதமர் மோடி தனி விமானம் சென்னை வந்துள்ளார்.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியானது இந்தியாவின் பன்முகதன்மையை காட்டும் விதமாக 8 மாநிலங்களின் பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.