#Live செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: மேடையில் பட்டு வேட்டி சட்டையில் அசத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று தொடங்குகிறது. மாமல்லபுரத்தில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்
இந்த நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ள நிலையில் , தொடகக விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பட்டுசட்டையில் வருகைபுரிந்துள்ளார்.