செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி - கமல்ஹாசனின் குரலில் தமிழ் பண்பாட்டு நிகழ்த்துக்கலை
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்புத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்பு
இந்நிலையில், நடந்து கொண்டு வரும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடன் பங்கேற்றுள்ளார். அதேபோல், பிரதமர் மோடியும் பட்டு வேட்டி சட்டையுடன் கலந்து கொண்டுள்ளார். ஒலிம்பியாட் நிகழ்ச்சி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பிரதமர் மோடிக்கு மாமல்லபுரம் சிற்பத்திலான நினைவுப் பரிசை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கமல்ஹாசனின் குரலில் நிகழ்த்துக்கலை
இதனையடுத்து, கமல்ஹாசனின் குரலில் தமிழ்நாட்டின் கலாச்சார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்று வருகிறது.
1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாச்சாரம் செழித்து இருந்ததற்கான சான்றும், முதலாம் நூற்றாண்டின் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் விளக்கப்பட்டு வருகிறது.
இந்திய பெருங்கடல் மார்க்கமாக ராஜேந்திர சோழன் கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று ஆண்டார் என்றும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிலம்பம் ஒரு சான்று என்று விளக்கப்பட்டது.
ஏறு தழுவுதல் வீர விளையாட்டின் பாரம்பரியம் கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நாட்டுப்புறக் கலைகள் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு என்றும் விளக்கப்பட்டது.