பள்ளி பாடத்திட்டத்தில் செஸ்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
பள்ளி பாடத்திட்டத்தில் செஸ் சேர்க்கப்பட உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பட்ஜெட்
சென்னை 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. இது, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள 2-வது பட்ஜெட் ஆகும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
பள்ளி
அதில் பள்ளி பாடத்திட்டத்தில் செஸ் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட , உடற்கல்வி பாடத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
மேலும் சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.