சேப்பாக்கம் தொகுதியை கைவிட்ட குஷ்பு..இனி உதயநிதிக்கு தொல்லை இல்லை
சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் சவாலாக குஷ்பு இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளில் மிகவும் வேகம் காட்டியது பாஜக.
அதிலும் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் அறிவிப்புக்குப் பல மாதங்களுக்கு முன்னரே குஷ்பு அங்கு பொறுப்பாளராக இறக்கி விடப்பட்டார்.
அவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஆனால் அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.