இது வெறும் ஆட்டுக்குட்டி கிடையாது சார் .. ஆஸ்கார் விருது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம்

annamalai tamilnadubjp giftedlamb chennimalai
By Irumporai Oct 05, 2021 07:08 AM GMT
Report

ஆட்டு குட்டியினை பரிசாக பெற்றுக் கொண்டது ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுத்துள்ளனர். இதற்காக தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ள அண்ணாமலை இதுதொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில்:

“சென்னிமலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் எனக்கு ஒரு ஆட்டு குட்டியை பரிசாக தந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி, அதிலும் கொங்கு மண்டலத்தின் வேளாண் சின்னமாக, நம் பண்பாட்டின் விழுமியமாக நான் ஆட்டுக்குட்டியை பார்க்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார்.