சென்னையில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்கப்பட்டார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவரும் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழிக்காக 15 அடி ஆழம் தோண்டியபோது மண் சரிந்து 3 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இதில் ஆகாஷ், வீரப்பன் ஆகியோரு உயிருடன் மீட்கப்பட்டனர்.
மண்ணுக்குள் சிக்கியுள்ள சின்னத்துரையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்று வந்தது. மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மூன்றாவது நபரும் மீட்கப்பட்டார். தொழிலாளி சின்னதுரை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.