ஜோதிடம் என்பது நம்பிக்கை அதையெல்லாம் அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி

astrology chennaihigh court
By Irumporai Aug 28, 2021 10:18 AM GMT
Report

ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்பதால் இது குறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கும், இஸ்ரோ அமைப்புக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாரட்டதக்கதாக இருந்தாலும், தனிநபரின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால், மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது இந்த பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருக்கிறது. அண்ட சராசரம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை.

ஆகவே மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, மூட நம்பிக்கை போன்ற தீமைகளை களைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை இருக்கிறது, எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்