சென்னையில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவர் செய்து வந்த சொமேடோ ஊழியர் கைது..!
சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த சொமேடோ ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை நியூ ஆவடி சாலை அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில், சென்ற சொமேடோ ஊரியரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், உணவு டெலிவரி செய்யும் பெட்டியில் 10 பீர் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பீர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சொமேடோ ஊழியரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீடு தேடி மதுபானங்களை டோர் டெலிவரி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரிடம் எழுதி கையெழுத்து வாங்கிய பிறகு காவல்துறையினர் அவரை, ஜாமினில் விடுவித்தனர்.