சென்னை வொண்டர்லா; பிரம்மாண்ட அம்சம் - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Chennai Tourism
By Sumathi Dec 02, 2025 07:43 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகில் ‘சென்னை வொண்டர்லா’ என்ற பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை வொண்டர்லா

65 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ 611 கோடி செலவில் இந்த தீம் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முதல் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் அமைகிறது. மேலும், ஸ்பின் மில், மார்விக் என ஏகப்பட்ட ரைட்கள் உள்ளன.

chennai wonderla

சென்னை வொண்டர்லாவில் பெரியவர்களுக்கு மட்டும் 42 வகை சவாரிகள் உள்ளன. இதில் 16 நீர் சவாரிகளாகும். குழந்தைகளுக்காக 10 தனிப்பட்ட சவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 52 சவாரிகள் உள்ள இந்த பூங்கா அனைத்து வயதினருக்கும் பொழுதுபோக்கை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய சவால்கள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

இன்று முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய சவால்கள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

டிக்கெட் எவ்வளவு?

முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறதாம். கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசனுக்கேற்ப மேலும் பல சலுகைகளும் அறிவிக்கப்படலாம்.

roller coaster

அடிப்படை நுழைவு கட்டணம் ஒருவருக்கு ஜிஎஸ்டி உட்பட ரூ.1489 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் நுழைவு கட்டணம் ரூ.1789. இந்த பூங்கா செயல்படுவதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் போன்ற நகரங்களில் செயல்பட்டு வந்தது.