மதுபோதையில் 21 வயது பெண் செய்த செயல் - சென்னையில் பரபரப்பு
சென்னை பாரிமுனையில் மதுபோதையில் 21 வயது பெண் ஒருவர் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதைப் பொருட்கள் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், உலகமெங்கும் நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சமீபத்திய தரவுகளின் படி ஆண்களை விட அதிகமாக பெண்களும் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் பாரிமுனையில் இருந்து தடம் எண் 35 கொண்ட மாநகர பேருந்து கொரட்டூர் பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்றபோது அந்த பகுதியில் நடைபாதையில் நின்றிருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் திடீரென சாலையில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. இதனைக் கண்டு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார் இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் அம்பத்தூர் ரயில்வே நடைமேடையில் வசிக்கும் வேளாங்கண்ணி என்பது தெரிய வந்தது. அவர் மது போதையில் இத்தகைய செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.