‘சுரேஷ் ரெய்னா இல்ல, அதுனால தான் சென்னைக்கு இந்த நிலைமை’ - ரசிகர்கள் கருத்து!

Chennai Super Kings IPL 2022 Suresh Raina
By Swetha Subash May 13, 2022 06:35 AM GMT
Report

சுரேஷ் ரெய்னா இடம் பெறாத 2 தொடர்களிலும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நேற்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கடுமையாக சொதப்பி போட்டியை தோற்றிருக்கிறது சென்னை அணி. ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்திருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனால், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டம் தொடங்கியே வேகத்திலேயே பவர் பிளேக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்தது.

‘சுரேஷ் ரெய்னா இல்ல, அதுனால தான் சென்னைக்கு இந்த நிலைமை’ - ரசிகர்கள் கருத்து! | Chennai Without Raina Did Not Make To Play Offs

கடந்த சில போட்டிகளில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தேவான் கான்வே. ஆனால், நேற்று இந்த மைதானத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது கான்வேயுடைய விக்கெட்தான். போட்டி தொடங்கிய முதல் 10 பந்துகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்த 3 விக்கெட்டுகளுக்கு சென்னை அணி டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை. கான்வே, மொயின் அலி, உத்தப்பா ஆகியோர் அவுட்டாகினர். இதில் மொயின் அலி கேட்சில் அவுட் ஆகினார். கான்வே, உத்தப்பா எல்பிடபிள்யூவில் அவுட்டாகினர். கான்வே போட்டியின் முதல் ஓவரிலேயே அவுட்டாகினார். அவரால் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை.

‘சுரேஷ் ரெய்னா இல்ல, அதுனால தான் சென்னைக்கு இந்த நிலைமை’ - ரசிகர்கள் கருத்து! | Chennai Without Raina Did Not Make To Play Offs

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. கான்வே எல்பிடபிள்யூவில் அவுட்டாகவில்லை. இருந்தாலும் அவர் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை என்கிற ஒரு மோசமான நிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அடுத்தடுத்து வந்த பிளேயர்களும் பிரெஸர் காரணமாக அவுட்டாகினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் எனும் நிலை ஏற்பட்டது. மைதானத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக டிஆர்எஸ் எடுக்க முடியாது எனக் கூறப்பட்டது.

மைதானத்தில் உள்ள மற்ற இடங்களில் மின்சாரம் இருந்தபோது, டிஆர்எஸ் எடுப்பதில் மட்டும் என்ன சிக்கல் எனும் கேள்வியை ஒரு தரப்பு ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஐபிஎல்-இல் இதுவரை 13 தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இது 2-வது முறை.

இந்நிலையில், மற்றொரு தரப்பு ரசிகர்கள் சுரேஷ் ரெய்னா இடம் பெறாத 2 தொடர்களிலும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.