மக்களே , ரிலாக்ஸா இருங்க இனிமேல் பயமில்லை : சென்னை வெதர்மேன் தகவல்

ChennaiRains chennaiweatherman
By Irumporai Nov 11, 2021 06:57 AM GMT
Report

மிக மோசமான கட்டத்தை தாண்டியிருப்பதாக 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தெரிவித்துள்ளாr.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்  வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தனது முக நூல் பதிவில் :

“மிக மோசமான கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். இனி விட்டு விட்டு சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பொழியும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட சென்னை - ஶ்ரீஹரிகோட்டாவை கடக்கும் வரையில், காற்று அதிகமாக வீசும் என கூறியுள்ளார்.

ன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரை இடைவெளி விட்டுவிட்டு பெய்யும். மக்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். மிக முக்கியமான கட்டத்தை தாண்டிவிட்டோம். கரையை கடக்கும் போது காற்று 40 கிமீ வேகத்தில் வீசும். என கூறியுள்ளார்.

மக்களே , ரிலாக்ஸா இருங்க இனிமேல்  பயமில்லை : சென்னை வெதர்மேன் தகவல் | Chennai Weather Man Chennai Rain

நேற்று பெய்த கனமழையில், சராசரியாக 150 மி.மி. வரை சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பெய்துள்ளது. சில இடங்களில் 200 மி.மி.-ஐ கடந்துள்ளது.

அதிகபட்சமாக, தாம்பரம் (233 மி.மி.); சோழவரம் (220 மிமி); எண்ணூர் (207 மிமி) ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரி 76% புழல் ஏரி 87%; சோழவரம் ஏரி 83%; செம்பரம்பாக்கம் ஏரி 75% நிரம்பியுள்ளன" எனக்குறிப்பிட்டுள்ளார்.