சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு ஹிந்தியில் வெளியானதால் பரபரப்பு

report wrong chennai weather hindi ban
By Praveen Apr 14, 2021 09:56 PM GMT
Report

 சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு விவரங்கள் இந்தியில் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் இந்தி திணிப்பு முயற்சி என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் ஒரு குற்றச்சாட்டாகும்.

தமிழகத்தின் சில ரயில் நிலையங்களில் இந்தி பெயர்கள் திணிக்கப்பட்டதால் சர்ச்சையானது. மத்திய அரசு அலுவலங்கள் மூலமாகவும் தொடர்ந்து இந்தி திணிப்பு வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.இந்த நிலையில் வழக்கமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறும் வானிலை முன்னறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது சென்னை வானிலை மையத்தில் சில அறிவிப்புகள் இந்தியில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தி பேசும் பணியாளர்கள் பெருகிவிட்டதால் இந்தியில் அறிவிப்பு வெளியானதாக வானிலை மைய உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

வானிலை அறிக்கையை மாநில மொழியிலோ, அல்லது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான ஆங்கில மொழியிலோ வெளியிடுவதை விட்டுவிட்டு யாருக்குமே புரியாத இந்தி மொழியில் வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு ஹிந்தியில் வெளியானதால் பரபரப்பு | Chennai Weather Hindi Report