சென்னையில் இந்த இடங்களில் மட்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் : குடிநீர் வாரியம் தகவல்!
சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருக்கிறது. இதனால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை சென்னை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
நெடுஞ்சாலை துறையால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் அவசர தேவைக்காக 8144930905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு லாரிகள் மூலம் தண்ணீரை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.