சென்னை vs மும்பை – சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடக்கம்
சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
ஐபிஎல் தொடர்
நடப்பாண்டு 16-வது சீசன் ஐபிஎஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில உள்ளன. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.
டிக்கெட் விற்பனை
இந்த சமயத்தில் எல்-கிளாசிகோ எனும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் மே 6-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மே 6-ல் சென்னை – மும்பை அணிகள் போதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கத்தில் தொடங்கியது. பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டு, ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி செல்கிறார்கள்.