வேளச்சேரியில் செவிலியர் காரில் கடத்தல் - செங்கல்பட்டில் மடக்கிய போலீஸ் - அதிர்ச்சி பின்னணி
சென்னை வேளச்சேரியில் இளம் செவிலியர் காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
ஒருதலை காதல் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்த சபாபதி (27) என்பவரை 21 வயதான செவிலியர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
சபாபதி உண்மையில் அப்பெண்ணின் உறவினரே. நீண்ட காலமாக அவர் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பெண் கேட்டும் தராத காரணத்தால், செவிலியர் அவர் கடத்தியுள்ளார்.
கைது
எப்போதும் போல பணி நிமித்தமாக வெளியே வந்த செவிலியரை தனது நண்பர்கள் ஹரிஹரன் (20), அஜய் (25), மற்றும் ராஜேஷ் (39) ஆகியோரின் உதவியுடன் கடத்தி இருக்கின்றார் சபாபதி.
[
விஷயத்தை சக செவிலியர் போலீசாருக்கு கூற, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கின்றனர் போலீஸ். சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆத்தூர் சுங்கச்சாவடிக்கு வந்த காரை மடக்கி சோதனை செய்த போது கைது சபாபதி மற்றும் அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.