நிரந்தரமாக மூடப்பட்ட உதயம் தியேட்டர் - அந்த இடத்தில் என்ன வருகிறது தெரியுமா?

Tamil Cinema Chennai
By Karthikraja Dec 30, 2024 10:30 AM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

சென்னையின் பிரபல திரையரங்கமானஉதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. 

உதயம் தியேட்டர்

சென்னையின் பழமையான திரையரங்களில் ஒன்றாக உள்ளது சென்னை அசோக் பில்லர் அருகே அமைந்துள்ளள உதயம் தியேட்டர்.

udhayam theatre open

 40 ஆண்டுகளுக்கு முன்னர், திருநெல்வேலி மாவட்டம் உதயத்தூரில் இருந்து சென்னைக்கு வந்த பரமசிவம் பிள்ளை, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 5 சகோதரர்கள் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி தியேட்டர் கட்ட முடிவெடுத்தனர். 

திறப்பு விழா

அப்போது சென்னையின் புறநகர் பகுதிகளாக உருவெடுத்த அசோக் நகர் கலைஞர் கருணாநிதி நகர்(கேகே நகர்) சந்திக்கும் பகுதியில் கடந்த 1983 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி திரையரங்கத்தை திறந்து தங்கள் ஊரின் நினைவாக உதயம் என் பெயர் சூட்டினர்.

40 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கி வந்த உதயம் தியேட்டரில், தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பால் அபிஷேகம் செய்து திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.   

udhayam theatre closed

தற்போது வரும் கூட்டமெல்லாம் மிக குறைவு. 1980களில் அசோக் பில்லர் வரை வரிசை வளைந்து நிற்கும் என திரையரங்கு உரிமையாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரம் நினைவை பகிர்ந்தார். 

மூடு விழா

'உதயம் தியேட்டரிலே என் இதயத்தை தொலைச்சேன்' என சினிமா பாடலில் வருமளவுக்கு ரசிகர்களின் பேராதரவு பெற்ற தியேட்டராக இருந்தது. இங்கு முதல் முதலாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவப்பு சூரியன் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களின் படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டுள்ளது. 

udhayam theatre closed

ஆரம்பிக்கும் போது, உதயம், சூரியன், சந்திரன் என மூன்று திரைகளை கொண்டிருந்தது. பின்னாட்களில் மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது. சென்னையில் மால்கள் அதிகரித்து அங்கு அதி நவீன வசதிகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் வர தொடங்கிய பின்னர் உதயம் போன்ற திரையரங்கங்களின் மவுசு குறையத் தொடங்கியது.

அந்த வகையில் சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கி வந்த உதயம் திரையரங்கம் தற்போது நிரந்திரமாக மூடப்பட்டுள்ளது. இந்த இடத்தை விலைக்கு வாங்கியுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 வருடங்களாக இயங்கி வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.