சென்னையில் சுனாமி போல கொரோனா பரவுகிறது. - தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி கவலை!
covid19
chennai
By Irumporai
சென்னையில் கொரோனா சுனாமி போல பரவி வருவதாக கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து இந்திய மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.
அதிலும் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தொற்று மிக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக்.
சென்னையில் கொரோனா பரவல் சுனாமி போல உள்ளது. ஆனால் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை
எச்சரிக்கையுடன் இருந்தால் நோய் தொற்று பரவலை குறைக்கலாம் என கூறினார்.