சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ்; பெரிய பிரச்சனையை தீர்க்கப்போகும் முடிவு!
சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை - திருச்சி
சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ்,
சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. சென்னை டூ திருச்சி 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும்.
8 வழி சாலை?
தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் நிலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. சென்னை-திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும்.
இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டு உள்ள
4 வழி சாலை பகுதியில் கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது 8 வழி சாலையாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
5. 55 மணி நேரமாக உள்ள பயண நேரம், 4 மணி நேரத்திற்கு கீழ் குறையும் என்று கூறப்படுகிறது.