சென்னையில் 4 வயது மகனுடன் ரயில் முன் விழுந்த பெண் - சுதாரித்த ஓட்டுநரால் உயிர் தப்பினர்... - குவியும் வாழ்த்து!
சென்னை, ஊரப்பாக்கத்தில் 4 வயது மகனுடன் ரயில் முன் விழுந்த பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 வயது மகனுடன் ரயில் முன் விழுந்த பெண்
சென்னை ஊரப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது, 4 வயது மகனுடன் ரயலில் விழுந்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்த ரயிலை உடனே நிறுத்தினார்.
மிதமான வேகத்தில் ரயில் அப்பெண் மற்றும் குழந்தை மீது மோதியது. இதில், இருவரும் காயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் அங்கு வர முடியாது என்பதால், பயணிகள் உதவியுடன் இருவரையும் அதே ரயிலில் ஏற்றிய ஓட்டுநர், தாம்பரம் கொண்டு வந்து, ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அப்பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டு
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண் பிரேமலதா என்பது தெரியவந்தது. இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார் என்றும் குடும்ப தகராறு காரணமாக பிரேமலதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரு உயிர்களை காப்பாற்றி ரயில் ஓட்டுநரை பொதுமக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.