சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து; குரல் கொடுத்த கனிமொழி

By Fathima Feb 24, 2026 11:40 AM GMT
Report

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.

ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து; குரல் கொடுத்த கனிமொழி | Chennai Train Cancelled