சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்!

Train Chennai
By Thahir Jun 24, 2021 10:41 AM GMT
Report

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்! | Chennai Train

கொரோனா தொற்று காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்களில், அரசு மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், நாளை முதல் மின்சார ரயில்களில் பெண்கள், 12 வயதுக்கு உட்பட்டோர், ஆண் பயணிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்காக 470 ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே தயாராகி உள்ளது. இதில் ஆண் பயணிகள் மட்டும் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை; மாலை 4 மணி முதல் 7:30 மணி வரை அனுமதிக்க மாட்டார்கள்.

மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.