கொரோனா விழிப்புணர்வு பேரணி நடத்திய சென்னை போக்குவரத்து காவல்துறை

covid19 tamilnadu
By Irumporai Apr 29, 2021 07:04 AM GMT
Report

சென்னை மெரினா .காந்தி சிலை அருகில் போக்குவரத்துகாவல்துறையினரின் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தொடங்கினர்.

சென்னையில் கடந்த சில வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தலமையில் இரு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இதில், முன்கள பணியாளர்களுக்கு‌ கபசுர குடிநீர் கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு பேரணி நடத்திய சென்னை போக்குவரத்து காவல்துறை | Chennai Traffic Police Corona Awareness Rally

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.