திடீர் தீ விபத்து - வீட்டில் இருந்த 3 பேர் தீப்பற்றி பலி! குடும்பமே உயிரிழந்த சோகம்!
சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 16-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவர் அப்துல் ரஹீம், மனைவி பாத்திமா, மகன் நஹீத் என மூன்று பேரும் சிக்கி படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விசாரணையில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,
தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது தீப்பற்றியதும் தெரியவந்தது.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரானின் அதிரடி தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : வெளிச்சத்திற்கு வரும் தகவல்கள் IBC Tamil