ஒருபக்கம் அக்கா..மறுபக்கம் தங்கை.. ! சர்வீஸ் கடைக்காரரின் தில்லுமுல்லு! வாழ்க்கையை இழந்த சகோதரிகள்!
சென்னையில் செல்போன் கடையில் சர்வீஸ் கடையில் வேலைபார்த்து கொண்டே அக்கா தங்கையின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி, அவர்களின் வாழ்க்கையில் விளையாடிய மன்மத ரோமியோவை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த 19 வயது பெண் திருமணமாகி சென்ற நிலையில், ஒரு நாள் அவரின் செல்போனை அவரது கணவர் எடுத்து ஆராய்ச்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் ஆடையில்லாத புகைப்படங்கள் வேறு எண்ணிற்கு அனுப்பப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதனால் பெற்றோர் வீட்டிற்கு சென்ற அந்த பெண், நடந்த விவரத்தை கூறியுள்ளார்.
இந்த பெண்ணின் அக்கா, கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது பேஸ்புக் மூலம் செந்தில்குமார் என்ற நபரோடு பழகி வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமியாக இருந்த இந்த பெண்ணும் அக்காவுக்கு தெரியாமலேயே அவரோடு பழகி வந்துள்ளார். இருவருக்கும் காதல் வசனங்களை அள்ளி தெளிக்கும், செந்தில்குமார் அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுள்ளார்.
இந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து திருப்பூர் வந்த இந்த பெண்ணை நேரில் சந்தித்து பாலியல் துன்புறுத்தலும் அளித்துள்ளான்.
அந்த சிறுமிக்கு தற்போது திருமணமான நிலையிலும், இவனது காதல் லீலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி அவர்கள் இருவரிடமும் இதுவரை 32 சவரன் நகைகள் மற்றும் பணத்தை பறித்துள்ளான்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்
பேரில், அந்த 42 வயது கொடூர காமுகனை போலீசார் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.